1. அந்த இரவு நேரத்தில் சுற்றிச் சுற்றி அச்சிறு வண்ணத்துப்பூச்சி என் மீது அமர்ந்தது ஒரு மலராக தெரிந்து இருப்பேனோ என்று தெரியவில்லை வட்டமடித்த அந்தப் பொழுதுகளில் தனிமை துயர்கள் பறந்து போயிருந்தன என்னை அதுவும் அதை நானும் இதற்கு முன் பார்த்ததே இல்லை அது ஏன் என்னிடம் வந்தது என்றும் அதன் பறத்தலில் என்னை ஏன் மெய் மறந்தேன் என்றும் தெரியவில்லை பிறகு நான் நித்திரைக்குள் அமிழ்ந்துபோனேன் என்னை மலர் என்று நினைத்த அது என்னைப் போன்ற ஒரு மலராகிய கவிஞனின் மடியில் அமர்ந்திருக்கக் கூடும். 2. நீலக் குழல் விளக்கின் வெள்ளை ஒளி அறை எங்கும் வியாபித்த பொழுதுகளில் ஒரு பூந்தோட்டம் தோன்றிய மாயையில் சிக்கிய அச்சிறு வண்ணத்துப்பூச்சி பூக்களின் மீது அமர்ந்து அமர்ந்து பார்த்தது விசித்திரமான இக்காட்சியில் அச்சிறு பூச்சியின் மூளையில் குழல் விளக்கின் சுடர் வெள்ளை மலர்களாக தோன்றியிருந்தால் அதன் கற்பனை அது சரிதான். 3. இருளை நீக்கிய ஒளியின் இடையே அச்சிறு வண்ணத்துப்பூச்சி ஏன் நுழைந்து பறக்கிறது என்று அறிவதற்கு இல்லை எதுவுமில்லாத வெறுமையில் எதைத் தேடுகிறோம் என்று தெரியாமல் ...
Posts
Showing posts from August, 2020
- Get link
- X
- Other Apps
Ll இரவின் குரலாய் அகவுகிறது மயில் அது உன் தனிமை ஏக்கத்தின் வெடிப்பாயும் இருக்கிறது இருள் பாய்ந்து வரும் பொழுதில் உன்னை நினைப்பதை தவிரவும் வேறெதுவும் இல்லை நீ உன் படுக்கையில் என் ஞாபகங்களை ஆலிங்கனத்தில் வீழ்த்தி இருக்கக்கூடும் ஒளியற்ற இருளில் உன் நினைவு தரும் ஒளியில் ஒரு நட்சத்திரத்தின் பிரகாசத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருக்கிறேன் அதுவே காதலின் உன்னதம் மகோன்னதம் எப்போது வேண்டுமானாலும் எந்தக் கணத்திலும் வந்துவிடும் மரணத்திற்கு முன் உனக்கான பாடல்களை எழுதி விடவேண்டும் அதைத் தவிரவும் இவ்வுலகில் முக்கியமான பணி ஏதும் இல்லை நீ என்னை நினைத்தவாறு உறங்கிக் கொள் உன் கனவின் இடையே உன்னை முத்தமிட உன்னருகில் இருப்பேன் அன்பே ...
- Get link
- X
- Other Apps
1. அந்த இரவு நேரத்தில் சுற்றிச் சுற்றி அச்சிறு வண்ணத்துப்பூச்சி என் மீது அமர்ந்தது ஒரு மலராக தெரிந்து இருப்பேனோ என்று தெரியவில்லை வட்டமடித்த அந்தப் பொழுதுகளில் தனிமை துயர்கள் பறந்து போயிருந்தன என்னை அதுவும் அதை நானும் இதற்கு முன் பார்த்ததே இல்லை அது ஏன் என்னிடம் வந்தது என்றும் அதன் பறத்தலில் என்னை ஏன் மெய் மறந்தேன் என்றும் தெரியவில்லை பிறகு நான் நித்திரைக்குள் அமிழ்ந்துபோனேன் என்னை மலர் என்று நினைத்த அது என்னைப் போன்ற ஒரு மலராகிய கவிஞனின் மடியில் அமர்ந்திருக்கக் கூடும். 2. நீலக் குழல் விளக்கின் வெள்ளை ஒளி அறை எங்கும் வியாபித்த பொழுதுகளில் ஒரு பூந்தோட்டம் தோன்றிய மாயையில் சிக்கிய அச்சிறு வண்ணத்துப்பூச்சி பூக்களின் மீது அமர்ந்து அமர்ந்து பார்த்தது விசித்திரமான இக்காட்சியில் அச்சிறு பூச்சியின் மூளையில் குழல் விளக்கின் சுடர் வெள்ளை மலர்களாக தோன்றியிருந்தால் அதன் கற்பனை அது சரிதான். 3. இருளை நீக்கிய ஒளியின் இடையே அச்சிறு வண்ணத்துப்பூச்சி ஏன் நுழைந்து பறக்கிறது என்று அறிவதற்கு இல்லை எதுவுமில்லாத வெறுமையில் எதைத் தேடுகிறோம் என்று தெரியாமல் எதையோ தேடித்...
- Get link
- X
- Other Apps
வானில் உதித்த வெள்ளியில் உன் இமைகள் அசைகின்றன நான் உன்னையே பார்ப்பதான பிரமையில் இரவும் வானமும் வந்தவுடன் நீயும் விண்மீனில் ஒன்றாய் வந்துவிடுகிறாய் பிறகு நான் இருளின் மீது அமர்ந்திருக்கிறேன் உன்னிலிருந்து சொல் சொல்லாய் உதிர்கிறது ஒளி நனைந்து நனைந்து அந்தகாரத்தில் மிதந்து மிதந்து உன்னை நுகர்கிறேன் ஒரு பைத்திய நிலையில் காதலின் பள்ளத்தாக்கில் விழுந்து புரள்கிறேன் நீ எங்கோ வேறொரு இடத்தில் மறைந்து இருக்கிறாய் என் திராணியற்ற கண்களால் கண்ணுற முடியவில்லை இயற்கையின் வெளியில் நிலவாகவோ விண்மீன் ஆகவோ அசைந்தாடும் ஒரு நாணல் ஆகவோ நதி இடையே துள்ளி விழும் ஒரு மீனாகவோ வெட்டவெளி காற்றாகவோ ஒரு பறவையின் குரலாகவோ கடலின் அலையாகவோ மலையின் அமைதியாகவோ உன்னைத் தரிசிக்கிறேன் எங்கும் செல்ல முடியாத நான் எங்கோ இருக்கும் உன்னை என் அருகினில் இப்படி உணர்ந்துகொள்கிறேன் காலம் மாறுகிற வேளை உன் நிஜத்தில் நிஜமாகிப் போவேன் .
- Get link
- X
- Other Apps
குளிர்ந்த காற்றில் நீ இருக்கிறாய் என்பது ஒரு புதிர் அதுவே ஒரு அழகிய கவிதை யாருமில்லாத தனிமையில் நீ மட்டும் இரவின் நட்சத்திரம் போல விழிகளால் இமைகளின் துடிப்பால் பேசிக்கொண்டிருக்கிறாய் நீயற்று நீ இருப்பதான புனைவில் என் இதயம் வாழ்ந்து கொள்கிறது அன்பே உன்னை சந்திக்கும் நாளை கனவு கண்டு கொண்டு இருக்கிறேன் நோய்த்தொற்றின் விபரீதம் உன்னை காணும் பாதைகளை நிரந்தரமாய் மூடிவிட்டது பயமுறுத்தும் உலகில் பாதாளத்தில் விழுந்த என் தனிமை உன்னை காண முடியாத தீவிர ஏக்கத்தில் பாதி செத்துவிட்டது பயந்து பயந்து வாழும் வாழ்வில் அர்த்தங்கள் சிதைந்து போயின உன்னை நானும் என்னை நீயும் காணும் காலத்தை யார் தரக்கூடும் கனவு மையமாகிய உலகில் நான் ஒரு கனவு நீ ஒரு கனவு இந்தச் சிந்தனை எவ்வளவு பெரிய துயர் அன்பே ....
- Get link
- X
- Other Apps
அதோ நம் இரவு பூப்பெய்திய பருவப் பெண்ணின் நாணத்துடன் வருகிறது அந்தியோ கண் மயக்கும் வண்ணங்களால் வரவேற்கப் போகிறது நீயும் நானும் பிறக்கப் போகும் ஆழ்ந்த அமைதியில் குளிர்விக்கும் நட்சத்திரங்களின் கீழ் காதலை கண்கள் கொண்டு தீட்டப் போகிறோம் உன் சினத்தால் உடைந்து போயிருந்த உரையாடலை கனிந்த பார்வைகளில் சீர் செய்து தொடங்குவோம் உன்னுடனான ஊடல் பல பொழுதுகள் நீடித்தாலும் உன் சொல் கேளா மனம் கூடலுக்கு ஏங்கித் ததும்பிவிடும் என் மீதான உன் புகார்கள் இருப்பினும் உன் இதயத்தினுள் அவற்றை எரித்துவிடுவதே நம் அன்பில் மழை பெய்வது சாத்தியமாகிறது சூரியன் மறைந்து துளிர்க்கும் இரவுகளில் நீயும் நானும் விரல் கோத்து நிலவினூடே நம்மிடையேயான முரண்கள் களைந்து தோள் சாய்ந்து இதழ்களில் கவிதைகள் புனைகிறோம் நகர்ந்து விரையும் காலத்தில் காயங்களையும் அதற்கான தைலத்தையும் வழங்கிக்கொண்டிருக்கும் உன்னிடம் நான் இது போன்ற இரவுகளை அள்ளி அள்ளி தந்துகொண்டிருப்பேன் அன்பே...
- Get link
- X
- Other Apps
அண்ணார்ந்து பார்த்தபோது ஒற்றை நட்சத்திரம் என்னைப்போல் தனிமையில் ஆயினும் அதற்கு என்னைப்போல் பல்வேறு யோசனைகள் இருப்பதுபோல் தோன்றவில்லை அதற்கு ஒளிர்வதை தவிர ஒரு பணியும் இல்லை நான் ஒளிர்வதுமில்லை இருளுவதுமில்லை ஏதாவது ஒரு யோசனையில் உயிருடன் உலாவுதல் தவிர ஒன்றுமில்லை அது தவிரவும் வாழ்வுதரும் துயர்கள் எண்ணிலடங்கா நட்சத்திரத்திற்கு துயர் இருப்பதாக ஒரு செய்தியும் இல்லை அதே இரவு முழுவதும் மின்னிக் கொண்டிருக்கும் பகலில் காணாமல் போகும் நானோ எல்லா பொழுதிலும் இருக்கிறேன் சிந்தனையில் விழுந்து துடிக்கிறேன் நான் எப்போது நட்சத்திரம் ஆவேனோ அப்போது இறந்திருப்பேன் ஒரு நட்சத்திரம் என்பது நீயாகவும் இருந்திருக்கக்கூடும்.
- Get link
- X
- Other Apps
மேகங்கள் உராய்ந்து கொள்வதுபோல சொற்கள் மாறுகிறவேளை விழிகளில் மறைந்த நதி பிளந்து நீர்த்துளிகள் கொடிக்கம்பிகளில் கண்ணீராய் உருண்டு திரள்கிறது புரிந்தும் புரியாமலும் நீளும் பேச்சில் அசம்பாவிதங்கள் தொடர் மழையினைப் போன்ற நடுக்கங்களைத் தருவிக்கின்றன தப்புத்தப்பான வாக்கியங்கள் தற்கொலையின் கதவுகளை திறப்பதற்கான சாவிகளை கைகளில் ஏந்தி நிற்கின்றன ஒரு நாளின் மழை நிதானமாகவும் மற்றொரு நாள் ஊரையே விழுங்கும் நிதானமற்றும் இருப்பதைப் போலவே இயக்கங்கள் புதிராகவே யாரும் யாருடனும் நெருங்கியிருப்பது தற்காலிகமானது எப்போதுமே பெய்யாத மழைபோலவே யாவும் அநித்யமானது அபூர்வமானது.
- Get link
- X
- Other Apps
ஒவ்வொரு சூரியோதயமும் அச்சத்தை உடன் அழைத்து வருகிறது பேரிடர் காலம் முடியும் வரை மரணம் தன் எண்ணிக்கையை உயர்த்துவதை நிறுத்தப் போவதில்லை திறந்தே கிடக்கும் மயானத்தில் எத்தனையோ நம்பிக்கைகளும் கனவுகளும் நெருப்பில் சாம்பலாகி உதிர்கின்றன பயம் ஒவ்வொருவரின் கழுத்தையும் கவ்வி பிடித்திருக்கிறது தெரிந்தவன் தெரியாதவன் அந்நியமாகி போனார்கள் அகன்று பெருத்து விட்ட இடைவெளியால் கைகொடுத்து கட்டித்தழுவி முத்தமிட்டதெல்லாம் நெடிய கனவாகிவிட்டது நான் உன்னையும் நீ என்னையும் நெருங்காதவாறு செய்துவிட்ட இந்த நோய்த்தொற்று நமக்கும் இவ்வுலகிற்கும் பெரும் சவாலாகிவிட்டது புலப்படா எதிரியைக் கொல்லும் காலம் நிகழ்கின்ற வேளைதான் உலகின் இரவுகள் ஆழ்ந்த நித்திரையில் அமைதிக்குத் திரும்பும் அப்போது நம் இரவுகளும் விடியாது இருக்கட்டும் அன்பே...
- Get link
- X
- Other Apps
பொட்டுப் பொட்டாய்த் தூறும் மழையில் நனையும் உடலில் நடுங்கும் நினைவில் நீயிருக்கிறாய் மழைக்கு முன்பான பொழுதில் பற்றிக்கொண்ட உரையாடலில் சொற்கள் சாம்பலாகிவிட்டன இடைவெளி கூடிய இக்காலத்தில் கனக்கும் தனிமையில் இதயத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன ஏதோ ஒரு கணத்தில் கைகூடும் கொண்டாட்டம் நீளும் கணங்களில் மடிந்துபோகிறது தானாகவே நிகழும் நிகழ்வுகள் விபரீதத்தை உண்டு பண்ணும் என்பதை முன்கூட்டியே அறிய முடியாமல் போகிறது எதிரிலிருந்து சந்தேகிப்பவர்கள் உண்மையைப் புனைவெனக் கொள்கிறார்கள் கருணையில் மிதக்கும் மென்மை நிரம்பிய மனம் சிராய்ப்புகளில் இரத்தம் சிந்துகிறது எதையும் சரி செய்துகொள்ள முடியாத போது பொட்டு பொட்டாய்த் தூறும் மழை சுயத்தை இழக்கச் செய்வது பெரும் ஆறுதலாய் இருக்கிறது அன்பே..
- Get link
- X
- Other Apps
பரந்து விரிந்த ஆகாயத்தின் கீழ் ஒரு சிறு துண்டு மேகம்போல் அலைகிறேன் காற்றின் மென்மையில் நிலைத்திருக்கிறேன் ஒரு பறவையைப் போல அந்தரத்தில் மிதக்க ஆசை மிதத்தல் அசாத்தியமானது ஆனாலும் மிதக்கிறேன் அதை உங்களுக்கு புரிய வைக்க முடியாது அற்ப பிறவிகள் வாழும் உலகில் அசாத்தியமானவன் கவிஞன் எந்த நோய் தொற்றும் என்னை எதுவும் செய்வதற்கில்லை என் நம்பிக்கை நீந்தும் மீன்களின் செதில்களில் கடல் என்னுடையது உங்கள் வலைகளை பிய்த்து எறிந்து விடுவேன் நான் ஒரு அபூர்வம் கவிதை ஒரு வினோதம் எனக்கு நீங்கள் எதுவும் தரத் தேவையில்லை எல்லாம் என்னிடம் வரும் நான் ஒரு கவிஞன் என் காதலில் அவள் இருக்கிறாள் அது போதும் இந்த வாழ்வு தரும் இடர்களைக் கடந்து விடுவேன் என் மரணம் உங்களுக்கு ஒரு செய்தியாக இருக்கலாம் ஆனால் என் கல்லறை நிலையானது அவளின் நினைவோடு உறங்கிக் கொள்வேன் நான் சிறுதுண்டு ஆகாயம் எனில் உங்களில் மழையாய்ப் பொழிந்து மறைந்து போவேன்.
- Get link
- X
- Other Apps
நோய் கிருமியால் ஸ்தம்பித்து கிடக்கும் உலகில் என்னைப் போன்று நீங்களும் ஸ்தம்பித்துப் போய் இருக்கிறீர்கள் எதையும் அறுதியிட்டுக் கூற எந்த முகாந்திரமும் இல்லை எங்கு நோக்கினும் சாவுச் செய்திகள் நோய்த்தொற்று எனினும் இதய வலி எனினும் மரணம் கொடிது தான் ஆனாலும் வாழ்க்கை மிக அழகானது வாழ்வதற்கானது நித்தியமான உலகில் நாம் இருப்பது அற்புதம் நான் அவளுடன் அன்பாக இருக்கிறேன் காதல் புரிகிறேன் பேரிடர் கால தனிமையின் துயர் வாட்டிய போதும் காதல் நினைவுகள் என்னைத் தாலாட்டுகின்றன அன்பே என்னை எதுவும் கொல்ல முடியாது..
- Get link
- X
- Other Apps
பரந்து விரிந்த ஆகாயத்தின் கீழ் ஒரு சிறு துண்டு மேகம்போல் அலைகிறேன் காற்றின் மென்மையில் நிலைத்திருக்கிறேன் ஒரு பறவையைப் போல அந்தரத்தில் மிதக்க ஆசை மிதத்தல் அசாத்தியமானது ஆனாலும் மிதக்கிறேன் அதை உங்களுக்கு புரிய வைக்க முடியாது அற்ப பிறவிகள் வாழும் உலகில் அசாத்தியமானவன் கவிஞன் எந்த நோய் தொற்றும் என்னை எதுவும் செய்வதற்கில்லை என் நம்பிக்கை நீந்தும் மீன்களின் செதில்களில் கடல் என்னுடையது உங்கள் வலைகளை பிய்த்து எறிந்து விடுவேன் நான் ஒரு அபூர்வம் கவிதை ஒரு வினோதம் எனக்கு நீங்கள் எதுவும் தரத் தேவையில்லை எல்லாம் என்னிடம் வரும் நான் ஒரு கவிஞன் என் காதலில் அவள் இருக்கிறாள் அது போதும் இந்த வாழ்வு தரும் இடர்களைக் கடந்து விடுவேன் என் மரணம் உங்களுக்கு ஒரு செய்தியாக இருக்கலாம் ஆனால் என் கல்லறை நிலையானது அவளின் நினைவோடு உறங்கிக் கொள்வேன் நான் சிறுதுண்டு ஆகாயம் எனில் உங்களில் மழையாய்ப் பொழிந்து மறைந்து போவேன்.