நோய் கிருமியால் ஸ்தம்பித்து கிடக்கும் உலகில்
என்னைப் போன்று நீங்களும் ஸ்தம்பித்துப் போய் இருக்கிறீர்கள்
எதையும்
அறுதியிட்டுக் கூற எந்த முகாந்திரமும் இல்லை
எங்கு நோக்கினும் சாவுச் செய்திகள்
நோய்த்தொற்று எனினும்
இதய வலி எனினும்
மரணம் கொடிது தான்
ஆனாலும்
வாழ்க்கை மிக அழகானது
வாழ்வதற்கானது
நித்தியமான உலகில்
நாம் இருப்பது அற்புதம்
நான் அவளுடன் அன்பாக இருக்கிறேன்
காதல் புரிகிறேன்
பேரிடர் கால தனிமையின் துயர்
வாட்டிய போதும்
காதல் நினைவுகள் என்னைத் தாலாட்டுகின்றன அன்பே
என்னை எதுவும் கொல்ல முடியாது..

Comments
Post a Comment