விழித்திரு பொழுதுகளெல்லாம் பெரும் பதற்றத்திலிருக்கின்றன அடுத்த கணத்தில் எத்தனை உயிர்கள் மடியுமோ எதிர்காலத்தை இறுக பற்றியிருக்கிறது அவநம்பிக்கை யாவரின் இதயமும் வழமையைவிட அதி வேகமாய்த் துடிக்கிறது அவளை மீண்டுமொருமுறைப் பார்க்க முடியுமா அவளுக்கான காதலை முத்தங்களில் சொல்ல இயலுமா இந்தத் துயர்மிகு காலத்தில் அவளை அணைத்து ஆறுதல் சொல்ல வழிகள் இருந்தும் மூடப்பட்டுவிட்டன அவள் கண்ணீர்க்குரல் சிதைத்துவிட்டது ஆழமாய் தொடுவுணர்வின்றி வெற்றுச் சொற்களால் என்ன செய்துவிட முடியும் சுவர்களுக்கிடையே அவள் ஞாபகம் கொல்லத் தொடங்கிவிட்டது ஆயிரமாயிரம் மனிதர்கள் செத்துவிழும் காலத்தில் நீ பயந்துபோயிருக்கிறாய் உனக்கான பிரார்த்தனையில் நீ நலம் பெற்றிருக்கிறாய் அமையிதியில் விழித்திரு உன் கதவுகளைத் திறந்து அப்படியே வாரிக்கொள்வேன் அன்பே.