ரகசியக் கதறல்

யாரோ துரத்துகிறார்களோ
போய்க்கொண்டே இருக்கிறேன்
எப்போது பிடிபடுவேன்
யாரும் சொல்லவில்லையே
பிடிபட்டுவிடுவேன்
சர்க்கஸ்கூடாரத்தின் விலங்கைப்போல
என் ரகசியக் கதறலை
நான் மட்டும் அறிந்தவனாயிருக்கிறேன்
என்னிடம் வரவில்லை யாரும்
என் கூக்குரல் எவன் காதுகளுக்கும்
எட்டவில்லை போலும்
எதையும் செய்ய வெளியேறாதே வீட்டிற்குள் இரு
யாரோ சொல்கிறார்கள்
என் தொலைவுகள் முடங்கிவிட்டது
வீட்டில் சுவர்களில்
ஒன்றாய் மாறிக்கொண்டிருக்கிறேன்.

Comments

Popular posts from this blog