எங்கோ அகவும் மயிலின் தனிமையில் இரவு எதற்காகவுமின்றி விழித்திருக்கிறது
இமை மூட மனமின்றி
காத்திருக்கும் மனிதர்கள்
எதையோ யோசித்துக் கொண்டிருப்பார்கள்
அதில் எண்ணற்ற வேதனைகள்
கவலைகள் இருக்கக்கூடும்
இந்த பூமியில் எதற்காக என்று தெரியவில்லை
யாரின் மீதும் எந்த நம்பிக்கையும்
இருக்கவில்லை
எல்லாம் பொய்யின் வடிவமாக நீடிக்கிறது
எதிரில் இருப்பவன் நல்லவன் போல நடிக்கிறான்
அது பேர் ஆபத்தானது
ஒரு பெண்ணின் மீதான காதல் மட்டுமே
வாழ்தலின் அர்த்தத்தை மெய்ப்பிக்கிறது
வேறொன்றும் மற்ற மனிதர்களிடம்
சாதித்துக் கொள்ள எதுவுமில்லை
ஆகையால் உன்னிடம் மட்டுமே
இருந்து கொள்ளுதல் சாலச் சிறந்தது
அதை நீ புரிந்து கொள்கிறவேளையில்
மரணம்கூட அற்புதமாக நடந்து விடும்
அதற்காகவே தான் நீ எவ்வளவு என்னை சாடினும் உன்னைச் சுற்றி வருகிறேன்
நீயோ தனிமையின் தீவிரத்தில்
என்னை உதாசீனம் செய்கிறாய்
அதை விட்டுவிடு
யாவும் நலமாக ஈடேறும் அன்பே ...

Comments
Post a Comment