வருகிறோம்
பசிப்பவனுக்கு எதையும் கொடுத்துவிடாதீர்கள்
அது சட்டத்திற்குப் புறம்பானது
நாங்கள் என்ன சொல்கிறோமோ
அதுபோலத்தான் நீங்கள் செய்ய வேண்டும்
பசித்தவனை எப்படி நடத்த வேண்டுமென்று
எங்களுக்குத் தெரியும்
அதில் குறுக்கிடும் அதிகாரத்தை
உங்களுக்கு வழங்க முடியாது
நாங்கள் சொல்வதுபோல முகக்கவசம் அணியுங்கள்
வீட்டை விட்டு வெளியில் புழங்காதீர்கள்
உங்கள் உயிர் எங்களுக்கு முக்கியம்
தேர்தல் வரப்போகிறது
பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்
உங்களுக்கு வேண்டியதை வீட்டு வாசலில் தருவோம்
உங்கள் கருணையை மூட்டை கட்டி ஓரமாய் வையுங்கள்
பசித்தவனுக்கு நீங்கள் தருவதை கள்
தேர்தலின்போது உங்களை அவசியம் சந்திக்க வருவோம்
நோய்த்தொற்றென்பது நாங்களில்லை என்பதை
இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள்
வருகிறோம்
சமூகப் பரவல் தொடங்கிவிட்டதா
என ஆராய வேண்டும்.

Comments
Post a Comment