Ll
இரவின் குரலாய் அகவுகிறது மயில் அது உன் தனிமை ஏக்கத்தின் வெடிப்பாயும் இருக்கிறது
இருள் பாய்ந்து வரும் பொழுதில்
உன்னை நினைப்பதை தவிரவும்
வேறெதுவும் இல்லை
நீ உன் படுக்கையில்
என் ஞாபகங்களை ஆலிங்கனத்தில்
வீழ்த்தி இருக்கக்கூடும்
ஒளியற்ற இருளில் உன் நினைவு தரும் ஒளியில் ஒரு நட்சத்திரத்தின் பிரகாசத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருக்கிறேன்
அதுவே காதலின் உன்னதம்
மகோன்னதம்
எப்போது வேண்டுமானாலும்
எந்தக் கணத்திலும்
வந்துவிடும் மரணத்திற்கு முன்
உனக்கான பாடல்களை எழுதி விடவேண்டும்
அதைத் தவிரவும் இவ்வுலகில்
முக்கியமான பணி ஏதும் இல்லை
நீ என்னை நினைத்தவாறு
உறங்கிக் கொள்
உன் கனவின் இடையே
உன்னை முத்தமிட
உன்னருகில் இருப்பேன் அன்பே ...

Comments

Popular posts from this blog