அண்ணார்ந்து பார்த்தபோது ஒற்றை நட்சத்திரம் என்னைப்போல் தனிமையில்
ஆயினும்
அதற்கு என்னைப்போல் பல்வேறு யோசனைகள் இருப்பதுபோல் தோன்றவில்லை
அதற்கு ஒளிர்வதை தவிர ஒரு பணியும் இல்லை
நான் ஒளிர்வதுமில்லை
இருளுவதுமில்லை
ஏதாவது ஒரு யோசனையில்
உயிருடன் உலாவுதல் தவிர ஒன்றுமில்லை
அது தவிரவும் வாழ்வுதரும் துயர்கள்
எண்ணிலடங்கா
நட்சத்திரத்திற்கு துயர் இருப்பதாக ஒரு செய்தியும் இல்லை
அதே இரவு முழுவதும் மின்னிக் கொண்டிருக்கும்
பகலில் காணாமல் போகும்
நானோ எல்லா பொழுதிலும் இருக்கிறேன்
சிந்தனையில் விழுந்து துடிக்கிறேன்
நான் எப்போது நட்சத்திரம் ஆவேனோ
அப்போது இறந்திருப்பேன்
ஒரு நட்சத்திரம் என்பது நீயாகவும் இருந்திருக்கக்கூடும்.

Comments
Post a Comment