குளிர்ந்த காற்றில் நீ இருக்கிறாய் என்பது ஒரு புதிர்
அதுவே ஒரு அழகிய கவிதை
யாருமில்லாத தனிமையில்
நீ மட்டும் இரவின் நட்சத்திரம் போல  விழிகளால் இமைகளின்
துடிப்பால் பேசிக்கொண்டிருக்கிறாய்
நீயற்று நீ இருப்பதான புனைவில்
என் இதயம் வாழ்ந்து கொள்கிறது
அன்பே உன்னை சந்திக்கும் நாளை
கனவு கண்டு கொண்டு இருக்கிறேன்
நோய்த்தொற்றின் விபரீதம்
உன்னை காணும் பாதைகளை
நிரந்தரமாய் மூடிவிட்டது
பயமுறுத்தும் உலகில் பாதாளத்தில் விழுந்த என் தனிமை
உன்னை காண முடியாத தீவிர ஏக்கத்தில் பாதி செத்துவிட்டது
பயந்து பயந்து வாழும் வாழ்வில்
அர்த்தங்கள் சிதைந்து போயின
உன்னை நானும் என்னை நீயும்
காணும் காலத்தை யார் தரக்கூடும்
கனவு மையமாகிய உலகில்
நான் ஒரு கனவு
நீ ஒரு கனவு
இந்தச் சிந்தனை எவ்வளவு பெரிய துயர் அன்பே ....

Comments

Popular posts from this blog