எனவே எந்த சத்தமும் இல்லை
அது ஒரு இரவு
மழை போய்விட்டது
குளிரும் என்னில் கதகதப்பு இல்லை
தனிமை சிந்தனையைத் தூண்டுகிறது
அதில் ஏன் பிறந்தேன் என்ற கேள்வி தோன்றுகிறது
ஏன் இறக்கப் போகிறேன் என்று கேள்வியும் பிறக்கிறது
இடைப்பட்ட ஆயுள் எதையும் செய்வது அறியாமல் எதையாவது செய்கிறது
உயிருடன் இருப்பவர்கள் உயிருடன் இருக்கவே விழைகிறார்கள்
உயிர் வாழ்வது பெரும் பிரயத்தனம் ஆகிவிட்டது
எல்லோரும் சந்தேகிக்கிறார்கள்
ஆட்கொல்லி நோய் என்னிடம் இருக்கிறதா என்று
நானும் அவ்வாறு இல்லை
இதற்கிடையில் காதல் நோய்
வாட்டி வதைக்கிறது
அதிலிருந்து எதையும் செய்ய முடிவதில்லை
கண்ணீர் தவிர அங்க வேற எந்த ஊற்றும் இல்லை
அது ஒரு மரணப் பள்ளத்தாக்கு
பிழைத்து விட்டால் பேரின்பம்
இல்லையேல் கல்லறைக்குள்
போவது உகந்தது
நான் நானாக இல்லை
இதுவே பெருந்துயரம்
காதல் ஆறுதலாக இல்லையெனில்
மடிந்து விடலாம்
கற்பனை உலகில் கவிஞன்
வாழ்ந்து மறைவான்

Comments

Popular posts from this blog