உன்னைத் தவிரவும் யாரையும் நினைத்திராத போதும் நீ ஏன் யாரையோ நினைத்து கொண்டதாக நினைத்தாய் இதில் என் தவறு ஒன்றுமில்லை
நீயே மூலகாரணம்
உன்னை கேள்வி கேட்டுக் கொண்டாய் எனில் அது உனக்கு விளங்கும்
இப்போது என் மீது விழும் மழைத்துளிகள் உன் ஈர இதயத்தை நினைவூட்டுகின்றன
என்னை நீ முழுதாக புரிந்து கொள்ளாத பட்சத்தில் உன் சந்தேகங்கள்
மழையில் முளைத்த காளான்கள் போல
முளைத்த வண்ணம் இருக்கும்
நீ அதற்கு இடம் கொடாதே
திறந்து கிடக்கும் இதயத்தில்
உன்னைத் தவிர வேறு யாரையும் அனுமதிப்பதில்லை
இதுவே காதல்
அதைப் புரிந்துகொள்ள மறுக்கிற உன் இதயம் மிகவும் பலவீனமானது
இப்போது குளிர்ந்த இரவில் மயில் அகவுகிறது
அதில் உன் குரலை மட்டுமே கேட்கிறேன்
உன் காதலை மட்டுமே உணர்கிறேன்
இது வெறும் பொய்யல்ல
இதுவே என் மெய்யுரை
முடிவெடுத்துவிட்டேன் நீயே
என் வாழ்வின் சகலமும் ஆனதாக
இனி நீதான் என் நம்பிக்கை என் உயிர்
என் மரணம்.

Comments
Post a Comment