என் கண்ணே
முழு நிலவின் அழகை விடவும் நீ அழகானவள்
நீ அருகில் இல்லாத பொழுதுகள் துரதிருஷ்டவசமானது
பேரிடர் காலம்
உன்மீதான காதலை தீவிரப்படுத்துகிறது
என் தனிமையை உன் நினைவுகளால் மாற்றிக் கொண்டேன்
நீ இருந்தும் இல்லாது இருக்கிறாய்
இது மிகப்பெரிய சோகம்
என் விழிகள் உன்னைத் தேடித் சலிக்கின்றன
ஆயினும் உன்னை அடையும் பாதைகள்
திறந்துவிடும் நம்பிக்கைகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன
விரைவில் உன் வீட்டுக்கதவை
என் விரல்கள் ஒலி எழுப்பும் காலம்
நெருங்கிவிட்டது
காத்திருத்தல் வலி எனினும்
சந்திக்கும் பொழுதுகள் அற்புதமானவை
நீயும் நானும் பேசிக்கொள்ள
எத்தனையோ இருக்கின்றன
மேலும் காத்திருக்கும் உன்னிடம்
என் பூரண இதயத்தோடு உன் வாசல் வருவேன்
அப்போது நீ என்னை
அள்ளி அணைத்துக் கொள்
பிறகு என்னைக் கைவிட்டு விடாதே அன்பே...

Comments

Popular posts from this blog