ஒற்றை நட்சத்திரம் போல உன்னை விட்டு தொலைவில் இருக்கிறேன்
உன்னைக் காணும் பொருட்டு இரவெல்லாம் விழித்திருக்கிறேன்
உன்னை காணாத என் இமைகள்
வலியில் துடித்துப் போகின்றன
ஆனாலும் என் நம்பிக்கை வற்றி விடாது
ஒவ்வொரு இரவும் உன்னைக் கண்டு விடுவேன் என்ற நினைப்பில்
இருளுக்குள் உன்னை அலசி கொண்டிருப்பேன்
வேறு யாரையும் பார்க்காமல் போனாலும்
உன்னைக் காணவே உயிர்த்திருப்பேன்
நீ என் ஆழ் மனதின் ரகசியம்
உன்னைத் தவிரவும் இவ்வுலகில்
பெரிதாய் வேறொன்றுமில்லை
ஊரடங்கு காலத்தில் என் பயணங்கள்
இறந்துவிட்ட போதும்
உன்னைக் காணும் விருப்பத்தை
கைவிடப்போவதில்லை
ஒரு நாள் எனக்கான பாதைகள்
என்னிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்
அப்போது உன் மடியில்
ஓர் நட்சத்திரம் போல விழிகள் அசைத்து
உன்னழகில் மெய்மறந்து கிடப்பேன்
மேலும் நம் இரவுகளை ஒளிவூட்டுவேன் அன்பே....

Comments
Post a Comment