முழு நிலவின் ஒளியை கவிஞனின் கண்கள் பருகிக் கொண்டிருக்கின்றன
அவனுக்கு அதைத் தவிரவும்
சிறப்பான பணி வேறெதுவும் இல்லை
உயிர்த்திருத்தல் ஒரு கலை எனினும்
இறப்பதும் ஒரு கலையே
கவிஞனைப் போல நீங்கள் இல்லை
கவிஞன் வேறானவன்
உங்களை மகிழ்விப்பவன்
அவன் செத்த பிறகு
மகாகவி என்பீர்கள்
சிலை வைப்பீர்கள்
அதைத் தவிரவும் உங்களுக்கு எந்த நியாயமும் தெரியாது
இப்படித்தான் பாரதி செத்துப்போனான்
,என்னைப்போன்ற கவிஞனும் செத்துப் போவார்கள்
பிறகு நீங்கள்
அவன் நினைவு நாளைக் கொண்டாடுவீர்கள்
இந்த அற்ப புத்தி உங்களை விட்டு நீங்காது
நானோ நிலவை ரசித்து நிலவின் கீழ் ஒரு கவிஞனாக விழித்திருக்கிறேன்
கவிதை எளிதல்ல
கவிஞன் அபூர்வமானவன்
அவனை இருக்கும்போது கொன்று விடுங்கள்
,அப்புறம் கொண்டாடுங்கள் நூற்றாண்டு விழாக்களை
நான் இருக்கும்போதும் கவிஞன்
இல்லாத போதும் கவிஞன்
வருகிறேன்
நிலவின் ஒளியில் மறைந்து கொள்ள போகிறேன் 

அது போதும் எனக்கு

Comments

Popular posts from this blog