உன்னைத் தவிரவும் காண்பது யாவும் வானவில் அற்ற வானத்தை
உற்று நோக்குவது போன்றது
உனக்கு இதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன்
அருகிலிருந்து உன்னிடம் பேசிய வார்த்தைகள் இப்போது ஞாபகம் ஆகிவிட்டது பெருந்துயரம்
அதை விடவும் உன் விரல் பற்றி
உன் இதழ் கவ்வி இரவை எழுதிய
பொழுதுகள் தொலைந்துபோனது
பெரும் வேதனை
நமக்கான பாதைகள் திறந்துவிட்ட போதும் உன்னைக் காணும் என் பயணத்தின் தேதி இன்னும் முடிவாகவில்லை
இருட்டுக்குள் ஒளிரும் சுடர்களை போல
உன் முகம் வந்து வந்து போகிறது
முத்தம் கொடுக்க துடிக்கும்
உதடுகள் மௌனத்தில் உறைந்து இருக்கின்றன
நீடித்திருக்கும் என் உயிரில்
நீதான் துடித்த வண்ணம் இருக்கிறாய்
நான் இந்த பூமியில் எத்தனை வருடங்கள் நீடிப்பேன் என்று தெரியவில்லை
நானும் உன்னை காணும் நோக்கத்தில்
எனக்கான விடியல்கள் வந்துகொண்டிருக்கும் அன்பே ....

Comments

Popular posts from this blog