இருட்டும் வெளிச்சமும் கூடிய ஒரு பொழுதில் உன்னைத் தவிரவும் வேறெந்த சிந்தனையும் இல்லை
நீ அவ்வளவுக்கு என்னை ஆக்கிரமித்து விட்டாய்
நீ கிளையெனில் நான் ஒரு மலர்
நீ முறிந்துபோனால் நான் உதிர்ந்து போவேன்
நீ கடலெனில் நான் ஒரு மீன்
நீ வற்றினால் நான் செத்துப் போவேன்
நீ காற்றெனில் நான் பழுத்த இலை
விழுந்து போவேன்
நீ தாமரை எனில் நான் ஒரு இதழ்
காய்ந்து போவேன்
நீ பட்டுப்பூச்சி எனில் நான் இறக்கைகள்
சிதிலமாவேன்
உனக்காய் என்னைத் தியாகம் செய்கிறேன்
என்னைத் துறப்பேன்
நீ இல்லாத இந்த பொழுதில்
உன்னை வேண்டி நிற்பேன்
ஒன்றும் நடக்காது
ஆயினும் ஞாபகத்தில் இருக்கும்
உன் உருவில் உயிர்த்துக் கொள்வேன் அன்பே ...

Comments
Post a Comment