என் அதிகாரத்தால் எந்த பயனும் இல்லை
நான் ஒரு நாடோடி
என் கருத்துக்களை எவனும் மதிப்பதில்லை
அதற்காக நான் வருந்துவதும் இல்லை
உணவில்லாத என் தட்டை நான் வேடிக்கை பார்ப்பேன்
பசி கொடுமை எனினும்
பசித்திருத்தலில் உலகத்தின் கொடுங்கோன்மை புரியும்
நீ எதையும் செய்யாதே
உன் வாழ்க்கை அதல பாதாளத்தில் விழுந்து விடும் என்பார்கள்
நான் செய்வதறியாது
என்னுடன் பேசிக் கொள்வேன்
வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு நற் பயனுமில்லை
இனியும் என்ன இருக்கும் என்று தெரியவில்லை
நீங்கள் சௌகரியமாக இருக்கிறீர்கள்
என் பதைபதைப்பு என் நடுக்கம்
அது எல்லாம் பற்றி உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை
முக்கியமாய் உண்மையாக இருக்கக் கூடாது
அதுவே உங்கள் கட்டளை
நான் தனி ஒருவனாய் இவ்வுலகின்
துரோகங்களை சரி செய்துவிட முடியாது
நான் நிலவைப் பார்த்து
கவிதை எழுத தகுதியானவன் என்பதை முடிவு செய்து விட்டேன்
நீங்கள் இனி உல்லாசமாய் இருங்கள்
சமூகமே ...

Comments
Post a Comment