ஒவ்வொரு தூறலும் நீயாய் இருக்கிறாய்
நனைய நனைய சுகம்
நீளும் இரவில்
எத்தனை நாழிகைகள்
இப்படியே அமர்ந்திருப்பேன்
மழைத்துளிகள் நீயான பின்
எனக்கு வேறு போக்கிடம் இல்லை
தனித்த வீட்டிற்குள் இருக்கும் நீ
நான் மழையாக உன்னை அனுபவிப்பதை அறிவாயா
அறிந்து கொள் என் பெண்ணே
அதிகாலை தோன்றும் சூரியனிலும்
உன் ஒளியையே உணர்வேன்
இதுவல்லவோ அதிசயம்
நீ என்பது மாபெரும் இயற்கை
ஒவ்வொன்றிலும் உன்னை தான் நுகர்வேன்
இந்த பைத்திய நிலை தான்
உன் மீதான பெரும் காதல்
எனைத் தீண்டும் காற்றிலும்
காற்றாக இருப்பதை அறிவாயா
அறிந்து கொள் என் பெண்ணே
உன்னை விட உயர்ந்ததாக என்னும்
யாவிலும் நீயேதான் இருக்கிறாய்
என்னை சந்தேகிக்காதே
உன் உயிர் துடிக்கும் ஓசையில்
நான் இருப்பதை மறந்து விடாதே
அது போதும்
இந்த ஜென்மம் கடந்து விடுவேன் அன்பே ....

Comments
Post a Comment