நடுநிசியில் மின்னல் வெட்டுகிறது வானம்
மிகப்பெரிய வெளவால்
கண்ணில் பட்டு மறைகிறது
இது என்ன சகுனம் என்று புரியவில்லை
யாரும் யாருடனும் இணக்கமாக இல்லை
சொற்களில் எப்போதும் தீப்பிடித்து எரிகிறது
தப்பான புரிதல் தவிர இங்கு எந்த நல்ல விஷயமும் நடைபெறவில்லை
கல்லறைகளை செய்வதற்கே
இவ்வுலகம் தயாராய் இருக்கிறது
உயிர் வாழ்வது உன்னதம் எனினும்
நடைமுறையில் அவ்வாறு அது இல்லை
அபலையான ஓர் உயிர் செத்தபிறகு
இந்த பூமி வருந்தும்
அதில் ஒரு அர்த்தமும் மிஞ்சுவது இல்லை
இப்படித்தான் எண்ணற்ற உயிர்கள் மடிந்து போய்விட்டன
யாருக்கும் ஒரு லாபமும் இல்லை
கண்ணீர் ஒன்றே கடைசியில் மிஞ்சும்
பிறப்பு வாழ்தல் அன்பைப் பகிர்தல்
யாவும் போலியின் வடிவங்கள்
கலைஞனுக்கு கவிதைகள் தவிரவும்
வேறொரு உலகம் இல்லை
அதில் அவன் கடைசியில் மாண்டு போவான்
அப்புறம் நினைவு நாளில் ஒரு சில பேர்
நினைவு கூறுவார்கள்
அத்துடன் எல்லாம் இனிதே முடிந்து விடும்
மின்னல் வெட்டுவதும் வவ்வால் பறப்பதும் கவிஞனுக்கு புதிராகப் போகும்.

Comments

Popular posts from this blog