அந்த ஆழ்ந்த இரவின் அமைதியில் உன் வீட்டின் ஜன்னல் வழியே நுழைந்த காற்று நம்மைத் தீண்டிக் காதலின் பாடலைத் தொடங்கிற்று
பரிமாறும் விரல்களில் உன் காமம் நடுங்கியது
வெறுமை சூழ்ந்த கட்டிலில்
இரவு விழிகளைத் திறந்திருந்தது
உன் இமையோரம் துளிர்த்திருந்த தாபத்தில் என் பார்வைகள் புரண்டன
திடீரென பெய்த மழையில் சாரல்கள் தெறித்து உன்னை நனைத்த போது
வெப்பத்தைத் துளாவியது உன்னுடல்
குளிர்மை விரவிய அறையில்
இதழ்கள் கவ்விக் கொண்டபோது மின்னல்கள் வெட்டின
அப்போது அவ்விரவை ஏதோ ஓர் இசைக்கலைஞன் மீட்டியது போலிருந்தது
இச்சையில் கணங்கள் தீப்பிடித்து எரிந்தன
ஒன்றல்ல இரண்டல்ல முத்தங்கள்
எத்தனை என்று வரையறுக்க முடியாத அந்த நாள் எப்போது வருமென
தவிப்பில் தத்தளிக்கிறது மனம்
புதையுண்ட தனிமையில் உன் அதரங்கள் மீட்டிய அரிய இசையில்
உயிர்த்திருக்கிறேன் அன்பே ...

மாலை 4 30, 6/7/20

Comments

Popular posts from this blog