உன்னை தீண்டாத உடல் தனிமையில் உழன்று தவிக்கிறது
இரவுகளைக் கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை
துன்புறுத்தும் உன் ஞாபகத்தில் ஈசலைப் போல செத்து வீழ்கிறேன்
உலகம் என்னவோ பெரும் மாயையில் சிக்கி உழல்கிறது
அடைபட்ட பாதைகளை உடைத்தெறிய முடியவில்லை
கண்ணுக்குத் தெரியாத நோய்க்கிருமியை வைத்து
இந்த பூமி நாடகமாடுகிறது
உன்னை நானும் என்னை நீயும்
சந்தித்துக் கொள்ளாத வேதனையை
யாரும் அறிய முற்படவில்லை
காதலைக் கொன்ற இந்த நோய்மை
விரைவில் அழியும் காலம்
நெருங்கிவிட்டது அன்பே
என் சாபம் பலிக்கும் நாளில்
உன்னிடம் வருவேன்
உயிர்த்து இருப்பாய் பெண்ணே
என் முத்தங்களில் உன் இரவை விழிப்படையச் செய்வேன்
அதுவரை காத்திரு
பின் இருட்டு நமக்கு சொந்தமாகி விடும்.

Comments
Post a Comment