அங்கு காற்று பலமாக வீசிக்கொண்டிருக்கிறது மரங்களெல்லாம் தலைவிரி கோலமாய் ஆடுகின்றன
கனத்த மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
வானம் இருட்டி பகல்பொழுது
இருள் ஆகிறது
சற்று நேரத்தில் அந்த இருவரின்
மூச்சு நின்றதைப் போல மயான அமைதி
குற்றங்கள் நடந்து முடிந்தது
இனி சாட்சிகள் மறைந்து போவார்கள்
புதுக்கதையின் அத்தியாயங்கள்
நம்பமுடியாத கற்பனைகளால் நிரம்பிவிடும்
தண்டனைகள் எரிந்து சாம்பலாகும்
குற்றவாளிகள் நிரபராதி ஆகிவிடுவார்கள்
நிவாரணத்தை வைத்துக்கொண்டு
படுகொலை செய்யப்பட்டவர்களால் என்ன செய்துவிட முடியும்
நீதிமன்றத்தின் சுவர்களில்
கறைகள் படிந்து வெகு நாட்களாயிற்று.

Comments

Popular posts from this blog