நீயோ உன்னை நினைக்கவில்லை என்கிறாய்
முறையிட எந்தக் கடவுளும்
உயிருடன் இல்லை
நான் என்பது நீயாகி விட்டபின்பு
நீ என்னை நம்ப மறுக்கிறாய்
என் சொற்களில் நான் தற்கொலை புரிந்து கொள்கிறேன்
இருட்டின் அமைதியில் உன்னுருவம் ஆகாய சுடர் போல் ஒளிர்கிறது
உனக்கு எதுவும் தெரிவதில்லை
நீ புனைவின் உச்சத்தில் என்னை சந்தேகிக்கிறாய்
எதுவும் செய்ய முடியாமல் நான்
என்னை நானே துன்புறுத்திக் கொள்கிறேன்
பனிக்காற்று இப்போது கொல்கிறது
நான் உணர்ச்சிகளின் பிழம்பு
நீயோ காதலின் ஆழத்தைத் தேடுகிறாய்
உன்னில் நான் உறைந்து விட்டேன் என்று சொன்னால் அது உண்மை இல்லை என்கிறாய்
பயமுறுத்தும் இரவில் என் தனிமையில்
பயத்தை நீக்க உன் கற்பனை உருவை
அனைத்துக் கொள்கிறேன்
நீ இல்லை எனில்
இந்த வாழ்வு சூன்யம் அன்பே ...

Comments
Post a Comment