நடுநிசியில் காகத்தின் கரைதலில் என் மனமும் இருந்தது
என் தனிமையை மீட்டெடுக்க எதுவும் உவப்பானதாக இல்லை
நான் இருக்கிறேன் என்பதை விடவும்
இல்லாமல் இருக்கிறேன் என்பதே உண்மை
இது உங்களுக்கும் பொருந்தும்
பேசாத இருளில் எனக்குள் பேசும் என்னுள் விரக்தி தவிர வேறொன்றுமில்லை
எதுவும் நித்தியம் இல்லாதது
இரவு தந்த போதையை
உன் சத்தமற்ற குரலால் கொண்டாடுகிறேன்
நீ ஒரு தேவதை எனச் சொன்னாலும்
உன் சொற்கள் துன்பமானது
என்னால் இவ்வுலகிற்கு எதுவுமில்லை
ஞானத்தைக்
கொன்று விடுகிறேன்
இயல்பாய் இருத்தல் விபரீதமானது
அது என் தவறும் கூட
என்னைப்பற்றிய புரளிகள்
உன்னை மகிழ்விக்க கூடும்
என்னைத் தவிர என்னிடம் யாருமில்லை
யாரும் எதுவும் வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள்
நான் என் சவப்பெட்டி செய்து கொண்டிருக்கிறேன்.

Comments
Post a Comment