உன் கீழ் படிந்து கிடக்கும் என் இதயம்
கூரிய கத்திகள் போன்ற துயரங்களில் கிழிந்து சிதைந்திருப்பதைப் பார்
என் உயிரைத் தக்க வைத்திருக்கும் அதனிடம் ஒரே ஒரு வேண்டுகோள்தான்
பார்க்கும்வரை துடிப்பை நிறுத்தி விடாதே என்பது
நிழல் போல் தொடரும் துன்பங்களில்
அது மேலும் காயமுறத்தான் செய்யும்
ஒவ்வொரு நாளின் விடியலையும்
காட்டுகிறது
ஒவ்வொரு நாளின் அஸ்தமனத்தையும் காட்டுகிறது
இன்னும் இன்னும் அது பலவீனமடையத் தொடங்குகையில்
என் இறப்பின் வாசலை
அது திறப்பதாக கொள்ளலாம்
என் காலம் முடியும்
கடைசிக் கணங்களில் கூட
கவிதையில் காதலித்து முத்தமிட்டு
உன் பிரிவின் மீந்த கண்ணீர்த்துளிகளில் நனைந்து மறைந்திருப்பேன் அன்பே.

Comments
Post a Comment