இருண்ட ஆகாயத்தின் ஊடே
நட்சத்திரத்தின் ஒளியாய் ஆறுதல் அளிக்கிறாய்
வறண்ட நிலத்தில் பெய்யும் மழையைப் போல உன்
உரையாடல் இருக்கிறது
சூழ்ந்திருக்கும் மரணம்
பயமுறுத்துகிற போது
உன் இளகிய மொழியால்
உயிரை மலர்விக்கிறாய்
துயரத்தில் ஆழ்ந்த பொழுதுகளை
உன் இசைக் குரலால் மீட்டுகிறாய்
தனிமையில் விழுந்து கிடக்கும் என்னிடம்
உன் அருகில்தான் இல்லாமல் இருக்கிறேன் என்கிறாய்
சதி செய்யும் காலத்தால் உன்னைப் பார்க்க முடியாது துவண்டு கிடக்கிறேன்
நீயும் நானும் சந்திக்கும் வேளையில்
பிரிந்த நாட்களின் வேதனையை
உடல்களால் கவிதைகளாக எழுதிவிடலாம்

அதுவரை தூரத்தில் இருப்பினும்
அருகில் இரு
சொற்களின் வடிவினில்.

ஜூன் 20 இரவு 11.03

Comments

Popular posts from this blog