நகரமெங்கும் சாத்தான்களின் ஓலங்கள் கேட்ட வண்ணம் இருக்கின்றன
உலகை துர்தேவதைகள் வலம் வருகின்றனர்
பூக்கள் மலர்வது குறைந்து கொண்டிருக்கின்றன
வானவில்லை ரசிக்கும் காலம்
மரித்து விட்டது
இறப்புச்செய்திகள் தவிர வேறொன்றும் காதுகளில் விழவில்லை
பத்திரமாய் இருங்கள் என்று ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்கிறோம்
ஆனால் வெளியெங்கும் காலன் உயிரைக் கவ்வ அலைந்து கொண்டிருக்கிறது
காற்றைக் கூட எளிதாய் சுவாசிக்க முடியாமல் முகமூடிகளால் மூடிக் கொண்டு இருக்கிறோம்
இறுதி மரியாதையில் உடல்கள் குழிகளுக்குள் வீசப்படுகின்றன
அர்த்தம் இழந்து நிற்கும் வாழ்வில்
சபிக்கப்பட்டு அல்லாடுகிறோம்
எப்போது வேண்டுமானாலும் நாம் இறந்து விடலாம்
நமக்குத் தெரியாமல் நம் அருகிலேயே இருக்கிறது மரணம்.
#கவிஞர்_ஐயப்ப_மாதவன்.

Comments
Post a Comment