பரந்து விரிந்த ஆகாயத்தில் இரண்டு நட்சத்திரங்களை அருகருகே காண முடிந்தது
ஒன்றோடொன்று பேசிக் கொள்ளவே இல்லை
ஏனெனில் இரண்டுமே மௌனத்தில் ஆழ்ந்து இருக்கின்றன
உலகமோ வியாக்கியானங்களில் மூழ்கிக் கிடக்கிறது
சொற்கள் அருவருப்பானவை
சொற்களற்ற உலகம் அழகானது
ஏன் பேசவேண்டும்
பேசாமல் இரு
மாபெரும் மலை பேசுவதே இல்லை
மலையைப் போல் இல்லாமல்
மழை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறாய்
நீ சாதாரணமாக இராதே
சக்திவாய்ந்த மலையைப் போல் இரு
மழை செத்துவிடும்

காதலென்பது
உடலின் விசாரணை
நீயும் நானும் தோற்றுப் போகலாம்
மரணத்தைப்பற்றி அறிவாயா.

Comments

Popular posts from this blog