மழை முடிந்தபின் நட்சத்திரங்கள் யாவும் திரும்பவும் வந்துவிட்டன
அவற்றில் எந்த மாற்றமும் இல்லை
ஒரு நட்சத்திரம் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்
ஒன்றும் செய்யமுடியாது
பிறகு ஏன் நீ இங்கு இருக்கிறாய்
யாருக்கும் தெரியாது
இங்கு வெயில் மழை என வந்து கொண்டே இருக்கும்
அனுபவிக்கலாம்
உயிர் இதயத்தில் இருக்கிறது என்கிறார்கள்
எனினும் எதுவும் புலப்படவில்லை
எல்லா உயிர்களும் அதனதன் வேலையைச் செய்கின்றன
இது ஏன் எனப் புரியவில்லை
சிந்திப்பது ஏனென கலக்கமாக இருக்கிறது
மொட்டைமாடியில் இருட்டின் நடுவே நானிருக்கிறேன்
நாளை இல்லாது போகலாம்
நான் அவ்வளவுதான்.

Comments
Post a Comment