பகல் போய் தொலைந்தால் போதும் என்று இருக்கும்போது குளிர்ந்த இரவு நிலவுடன் வந்துவிடுகிறது. இந்தக் கோடையை கடப்பது அவ்வளவு எளிதானதல்ல. மனம் தொடர்ந்த  மழைக்காலத்திற்கு ஏங்குகிறது. ஆனால் அவ்வளவு பக்கத்தில் இல்லை. வெயிலைக் கண்டு அஞ்சி அஞ்சி இரவுக்காய் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் மழைக்காலத்தில் இருக்கும்போது வெயிலுக்காக தவிப்போம். ஆயினும் மழை பெய்யும் காலம் சாரல்கள் நமக்குப் பன்னீர் தெளிக்கும். மழை தரும் குளிர்வில் வெயில் கொஞ்சம் வெறுப்பானது தான்.

எனினும் நாம் பருவகாலங்கள் இடையே தான் இருக்கிறோம். அவற்றை நுகர்தல் இன்றி வேறொன்றுமில்லை.

Comments

Popular posts from this blog