நான் வண்ணத்துப் பூச்சியாக மாறி பறந்தபோது என்னில் எத்தனை வண்ணங்கள்
யாரின் கவனிப்பும் இன்றி எல்லாத் திசைகளிலும் வெளியை
எனதாக்கிப் பறந்தேன்
என் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் மலர்கள் மலர்கள்
யாவும் அத்தனை அழகு
வெவ்வேறு அழகு
எழுதிச் சொல்ல வார்த்தைகள் இல்லை
இன்னும் சில நாட்கள்தான்
மலர்களின் நினைவோடு
மறைந்து போவேன்
என் சிறகுகள் மலர்கள் போல
உதிர்ந்திருக்கும்.

Comments

Popular posts from this blog