நீ அந்திப்பொழுதின் நிறங்களில் ஒளிர்ந்து இரவின் இடையே நட்சத்திரங்கள் ஆகிவிடுவாய்
உன் சிமிட்டல்கள் உரையாடலைப் போன்று தோன்றும்
இருட்டில் சுடரும் உன் நிர்வாணத்தில்
மதுவின் போதை ததும்பும்
ஊடலில் கத்திகள் போன்ற கூர் தன்மை வாய்ந்த உன் வார்த்தைகள்
ரத்த ஊற்றுக்களைத் திறந்து விடும்
ஓர் மழைநாளில் உன் சூட்டில்
பதுங்கிய போது
இன்பத்தில் மூழ்கியது உடல்
காதல் வசந்தத்தில் பூக்கும் மலர்கள் போன்றது
சிலவேளைகளில் இலையுதிர் காலத்தின் சருகுகள் போன்று சலனத்தில் வீழ்கிறது
நீரோடை மீன்கள் போல
ஓரிரு பொழுதுகளில் துள்ளித் திரிந்த போதும்
வலைகளில் சிக்கி மடியும் காலமும் வந்துவிடுகிறது
சொற்கள் தூண்டில் முள் போல குத்திக் கிழிக்கிற வேளையில்
செதில்கள் காயமுறுகின்றன

இருப்பினும் வானவில்லில் உன் முகங்கள் அலைமோதிய வண்ணமிருக்கின்றன இமைகளின் ஓரங்களில்.

ஜூன் 15 -  இரவு 11.48

Comments

Popular posts from this blog