நேற்று பார்த்த நட்சத்திரம் இன்றும் 
என்னைப் பார்த்துச் சிரிக்கிறது
நான் ஏன் இருக்கிறேன் என்று அதற்குப் புரியவில்லை
அது ஏன் இருக்கிறதென்று எனக்குப் புரியவில்லை
இருவரும் புரியாமலேயே இருக்கிறோம்
என்னிருப்பும் அதனிருப்பும் வேறு வேறானது
நான் செத்துப்போவேன் அதாவது நான் அநித்யம்
அது இருக்கும் அது நித்யம்
அது என்னைப் பார்த்துச் சிரிப்பதில் அர்த்தமிருக்கிறது
அதைக் கண்டு என்னால் சிரிக்கவே முடியவில்லை
என்னை நோய்த் தொற்றுத் துரத்துகிறது
வெட்டுக்கிளி விரட்டுகிறது
நான் பலகீனன்
என் உயிரை எதுவும் பறிக்கலாம்
நட்சத்திரம் நட்சத்திரம்தான்.

Comments

Popular posts from this blog