கண்களில் ஜாமத்தின் மழை
அது சிற்றோடை போலவும் மாறக்கூடும்
தனிமையில் ஒரு கனவைப் போலிருக்கிறாள்
ஒரு பைத்தியம் போல் அவளாக பாவித்துப் பேசுகிறேன் சுவரிடம்
மொட்டைமாடிக்கு சென்று சென்று வருகிறேன்
இரவுகளில் பெருகி ஓடுகிறது வெறுமை
காற்றாவது மரங்களிடம் உரையாடுகிறது
என்னிடம் பேசிப்பேசியே என்னிடம் பதில்கள் இல்லை
உலகம் திடீர் மரணங்களால் நிரம்பிய வண்ணம்
ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து செல்கிறார்கள்
நிலத்தை சாவு இறுகப் பற்றிக் கொண்டுவிட்டன
குரல்வளைகளின் அருகே அதன் நெளியும் விரல்கள்
கடைசி மூச்சுக்கு முன்னதாக ஒருமுறையேனும் அவளைப் பார்த்து விடவேண்டும்
இப்போது
என்மீது விழுந்த மழைத்துளியில்
அவள் இமைகளின் வலி
எனக்குள் மேகத்தின் வெடிப்புகள்.

Comments

Popular posts from this blog