கல்லறை மலர்களிலிருந்து மரணத்தின் வாசனை நாசிகளைக் குடைகிறது
எத்திசையிலும் ஆந்தைகளின் அலறல்கள் போல மனிதர்கள் அலறிய வண்ணம் இருந்தனர்
கொட்டித்தீர்க்கும் கனமழை போல எங்கும் வழிந்தோடும் கண்ணீர்த்துளிகள்
நிரம்பிக் கிடக்கும் பிணவறையில் குரோதமும் விரோதமும் துரோகமும் கசிந்து கொண்டிருந்தன
கைவிடப்பட்ட அனாதைகள் சாலையோரங்களில் மூச்சற்று கிடந்தனர்
நகரம் மயான காடு போல காட்சியளித்தது
காலனைக் கண்ட மருத்துவர்கள்
தலை தெறிக்க ஓடி மறைகின்றனர்
மக்களை கைவிட்டவர்கள் பதுங்கி விட்டனர் எங்கோ
உயிர்கள் செத்து மடிய மடிய
ஆழ்ந்த தனிமைக்குள் மெல்ல மறைகிறது நகரம்.

Comments

Popular posts from this blog