வெயில் காலம் போன பின்பும் வெயில் குறையவே இல்லை. உடலும் மனமும் பிசுபிசுத்து கொண்டே இருக்கிறது. ஆகாயம் நீல நிறத்தில் சுடர்கிறது. வெயில் அடிப்பது தெரியாமல் மரங்கள் காற்றுடன் கொஞ்ச மகிழ்கின்றன. சூரியனுக்கு உலகைப் பற்றிய அக்கறை இல்லை. அது அதன் வேலையைச் செய்கிறது. நாமோ வராத மழையை எதிர்பார்க்கிறோம். ஆனால் அது எப்போதாவது வந்து விட்டு மறைந்து விடுகிறது. மழை வந்த கணங்களில் நாம் மகிழ்ச்சியில் உறைந்துப் போகிறோம். பின்பு மலை எங்கோ போய்விடுகிறது. திரும்பவும் நல்ல வெயில். மழைக்காய் இந்த மனம் ஏங்கத் தொடங்குகிறது . பருவங்களின் விளையாட்டில் துயரங்களும் மகிழ்ச்சிகளும் வந்துபோகின்றன. இப்படித்தான் இந்த வாழ்வு இருந்துகொண்டே இருக்கும்.

Comments

Popular posts from this blog