தற்கொலைக்கான நியாயத்தை இறந்தவரிடம்
எப்படிக் கேட்டு விடமுடியும்
நசுக்கும் பெரும் பாறைகளுக்கிடையே விடும்
பெருமூச்சினை உணர்வதற்கில்லை யாரும்
மலர்களும் நிலவும் பறவைகளும் கூடிய
அழகிய பொழுதுகள் நம்மைச் சுற்றி இருந்தபோதும் நாம்
கண்களில் நரகத்தைக் காணவே விதிக்கப்பட்டிருக்கிறோம்
விடியல் இரவு உரையாடல் வழமையாய்
நம்மைக் கடக்க ஒரு கணமொன்றில் மரணம் நம்மை வரவேற்கும்
விடைபெறுதலின்றி வேறொன்றுமில்லை.
சபிதா நீங்கள் விட்டுச் சென்ற புகைப்படத்தில்
உங்களைச் சந்தித்த பொழுதினைக் காண்கிறேன்
இளைப்பாறுங்கள்.

Comments
Post a Comment