இன்னும் எத்தனை தூரம் நடக்க வேண்டுமோ
என் கால்கள் இப்போதே துவண்டுவிட்டன அம்மாவின் உடல் தாங்கதென இடுப்பிலிருந்து இறங்கிக்கொண்டேன்
எப்போது வீடு வரும் அம்மா
இதோ வந்துவிடும் செல்ல மகனே
அம்மா நீ தரும் நம்பிக்கையில்
எத்தனை மைல்களும் நடப்பேன்
ஏன்னம்மா நாம் நடந்தே போகிறோம்
முன்பெல்லாம் பேருந்தில் அல்லவா அழைத்துச் செல்வாய்
இப்போது ஏனம்மா இப்படி
எல்லாம் நம் நாடு நமக்குத் தந்த வெகுமதி மகனே
நம்மிடம் பொய்கூறியவர்களின் சதி
வாக்குறுதி அளித்தவர்களின்
அராஜகம் அயோக்கியத்தனம் மகனே
இவர்களின் நாற்காலி கனவுகளுக்கு விலை போய்விட்டோம்
அவர்கள் அங்கே அமர்ந்திருக்கும்வரை நாம் நட்டாற்றிலும் நடுவீதிகளிலும்தான்
வாழ்ந்துகொண்டிருப்போம்
நட மகனே நட மகனே
நாம் நாசமாய்ப் போகவே இந்த தேசத்தில் பிறந்திருக்கிறோம்
நாம் வாழ்ந்தாலும் செத்தாலும் அவர்களுக்கு ஒரு நட்டமுமில்லை
எப்படியோ ஜெயித்துவிட்டார்கள்
இனி நாம் அவர்களின் அடிமைகள்தான்
நட மகனே நட
நம் வீடு வந்துவிடும்
நம் தேசம் வந்துவிடாது.
PC : Dayalan Shunmuga

Comments
Post a Comment