நானிருந்தேன் என் அவமானங்களை எரித்துக்கொண்டு
ஆனால் எதுவும் நீங்கவில்லை
இதயம் ஆழ்கடல் அலைகளில் சிக்கி உழன்றது
காலம் என்னை உலகைவிட்டு பறித்துப்போட்டுவிடத் துடிக்கிறது
எதோ ஒரு சிறு நம்பிக்கை வாழ்ந்துவிட்டுப் போ என்கிறது
துரத்தும் துரோகங்கள் என்னை பயமுறுத்துகிறது
ஏன் இப்படி ஒரு மோசமான வாழ்விற்குள் இருக்கிறேன்
எதுவும் புரியாமல் பகலிலும் இரவிலும் தள்ளாடித் திரிகிறேன்
ஒளிரும் இருளுக்கு ஒன்றுமில்லை
ஒரு பாவமும் செய்யவில்லை
அமைதியில் உறைந்து மடிகிறது
நான்தான் எக்கணமும் இறக்கை முறிந்து கிடக்கிறேன்
என் வாக்கியங்கள் துருப்பிடித்து இளிக்கின்றன
என் சொற்கள் எனக்கே எதிரியானவை
உங்களைச் சொல்லிக் குற்றமில்லை.

Comments

Popular posts from this blog