குயில்கள் நல்ல வெயில் பொழுதில் கூவிக்கொண்டிருந்தன 
தேர்ந்த இசைக்கலைஞன் போல்
நானோ தனிமை தந்த சோகத்தில் ஆழப்புதைந்திருந்தேன்
எதுக்காக எனத் தெரியாமல் கூவும் அதனியல்பு என்னிடமில்லை
யோசித்து எதையும் செய்யும்
வல்லமையின்றி சுருங்கிப்போகிறேன்
என்னைச் சுற்றிலும் என்னை மீறமுடியாத சுவர்
நினைத்த எல்லைக்குப் போக முடியாத விதிகள்
குயிலின் வெளியோ எல்லையற்று நீண்டு கிடக்கிறது
எத்திசையிலும் பறக்கலாம்
எம் மரத்திலும் ஓய்வெடுக்கலாம்
முக்கியமாய் அதற்கு அரசாங்கம் இல்லை
எப்போது வேண்டுமானாலும் கூவும்
தன்னை ரசித்துக்கொள்ளும்
நானோ அறிவிற் சிறந்தவன்
ஆகச் சிறந்த அடிமை.

Comments

Popular posts from this blog