நடு இரவில் காகங்கள் கரைகின்றன
ஏனோ
இருட்டின் நடுவில் என்னுடல் 

ஏதோ பயத்தில் நடுங்குகிறது
உறக்கத்தில் நகரம் விடியலுக்கான பாதையில் 

நகர்கிறது மெதுமெதுவாய்
நான் வந்த காரணம் அறியாமல் எனக்குள் பிதற்றுகிறேன்
நட்சத்திரங்களைக் கூர்ந்து கவனித்தேன்
அது ஏன் மின்னுவதை நிறுத்தவில்லை என யோசித்தேன்
வெகுதூரத்திலிருக்கும் அது ஏன் இருக்கிறது
எங்கோ காவலாளியின் எச்சரிக்கை ஒலி
அவன் ஏன் அடர்ந்த இருளின் மீது யாருமில்லாது திரிகிறான்
திருடர்கள் இல்லாத வெளியில்
எத்தனை நாட்கள் இவற்றுடன் நானிருப்பது
யார் தீர்மானிக்கிறார்கள்
இருளில் என் உயிர் துடிக்கிறது
அது நீள்கிறது
கனவு போன்ற வாழ்க்கையில் எல்லாம் நிஜம் என்கிறார்கள்
ஆனால் எதுவும் அப்படியானதில்லை
ஆமாம் அப்படியானதில்லை.

Comments

Popular posts from this blog