எத்தனை துரோகங்கள் நிகழ்ந்த பின்னும் 
இசையின் வழியே நம்பிக்கை மலர்கிறது
அது அற்புதத்தின் ஆரம்பம்
எல்லையைச் சேர்ந்துவிட்ட உற்சாகம்
காத்திரு
பொழுதுகள் விடியலிலிருந்தே தொடங்குகிறது
உன் கண்ணீர்த்துளிகள் உன் சாதனையை எட்டிப்பிடிக்கும்
சத்தியங்கள் தோற்பதில்லை
இரவென்பது இருட்டெனினும் பின்னே வரும் விடிய

அதை ஒளியாக்கிவிடும்

நாம் உயரச் செல்கையில் சற்று கீழே விழுந்தாலும் 

உயரத்தை நோக்கிய படிக்கட்டுகளில் சென்றுகொண்டிருப்போம்
நட்சத்திரங்கள் நம் வசமாகிவிடும்.

Comments

Popular posts from this blog