வண்ணத்துப்பூச்சிகளுக்கு வண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்று அறியமுடியவில்லை 
கண்களுக்கு ரசிக்கும் எண்ணம் எங்கிருந்து உதிக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடிவதில்லை
மலர்களில் தேனிருப்பதை எப்படி அறிகிறது என்பதும் புரியவில்லை
மலர்கள் அவற்றின் வருகையும்
உணர்வதில்லை
யோசிக்கும் ஆற்றலில் யாவும் அறியும் நான் யோசிக்காதவற்றின் அழகில்
மயக்கமுற்றுப்போவதும் தெரியவில்லை
யோசிக்காத யாவற்றின் புதிரை
யோசிக்கும் நான்  அவிழ்க்க வழியில்லை வண்ணங்களை
வண்ணத்துப்பூச்சிகளில் விட்டுவிடுவோம்.

Comments

Popular posts from this blog