எங்கள் கதறல் உங்களுக்கு கேட்டிருக்காது நாங்கள் அழுவதற்கும் வறுமையில் உழல்வதற்குமே சபிக்கப்பட்டிருக்கிறோம்
உழைக்கும் வழியையையும் ஒழித்துக்கட்டிய நீங்கள் இப்போது
எங்கள் நிலத்திற்கான பயணத்தையும்
அபகரித்துக்கொண்டீர்கள்
எதுவுமில்லாத எங்களிடம் மீந்திருக்கும்
உயிர் வாழும் நம்பிக்கையையும்
தகர்த்துவிட்டு நல்லது செய்வதுபோல் நாடகம் ஆடுகிறீர்கள்
இனாம் தருவதாகக் கூறி மோசடி செய்கிறீர்கள்
வாக்களித்த எங்களை நடுத்தெருவில் நிறுத்தி பட்டினியில் ஆழ்த்திவிட்டீர்கள்
தூரத்திலிருக்கும் வீடுகளுக்கு போய்ச் சேருவோமா உயிருடன் என்று தெரியவில்லை
கைகளில் சல்லிக்காசில்லை
பசியில் குழந்தைகள் துடிக்கிறார்கள்
இதயம் வெடித்துச் சிதறுமோசை
உங்களுக்கு கேட்கவில்லை
இரக்கமற்ற பாவிகளே
உச்சாணியில் ஏற்றி வைத்த எங்களை
பிச்சையெடுக்க வைத்துவிட்டீர்கள்
சட்டத்தையும் அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு கனவு காண்கிறீர்கள்
எல்லாம் ஒரு நாள் சிதையும்
முற்றிலும் அழிந்து போவீர்கள்
எங்கள் கண்ணீர் சுட்டெரிக்கும் காலம் வந்துவிடும்
அதுவரை எங்களை உங்கள் கால்களுக்கு கீழ் போட்டு மிதித்து கொடுங்கோல் ஆட்சியை நடத்துங்கள்
அதிகார வர்க்கமே...

Comments
Post a Comment