ஒற்றைத் தட்டான் கொடும் வெயிலின் மீது
பறந்தலைகிறது தனக்காய்
சுவரில் விழும் அதன் நிழல்
என்னைப் போலவே தடுமாறுகிறது
மிருதுவான இறக்கைகள் எரிந்துவிடுமோ
எனப் பதறியவேளை
அது பறந்துகொண்டுதானிருந்தது
முதுவேனிற்காலத்தில் கடுஞ்சூட்டில்
தன் பயணத்தில் மூழ்கிய அது
என்னைச் சுற்றி வந்து என்னைப் பார்த்ததா
என்று தெரியவில்லை
ஆனால் தன்னைக் கவனித்துக்கொண்டு பறந்தது
அந்தரத்தில் மிதந்தலைதல் போல்
வேறென்ன என்றவாறு.

Comments
Post a Comment