எங்கள் வங்கிக்கணக்குகளில் இருந்த இருப்பு கரைந்துவிட்டது 
எங்கள் வருமானம் பூஜ்ஜியத்தில்
எங்களிடம் மீதமாய் பசி மட்டுமே
இனி எங்களுக்கு உழைக்கும் மார்க்கமில்லை
நாங்கள் இறந்துபோக தயாராகிக்கொண்டிருக்கிறோம்
சொற்ப நாணயங்களை இனமாய்க்கொடுத்துவிட்டு முடிந்தால் பிழைத்துக்கொள்ளென கைவிரித்துவிட்டது அதிகாரம்
வீட்டுக்குள்ளிரு உயிரைப் பாதுகாத்துக்கொள் எனச் சொல்லிவிட்டு
நோய்த்தொற்றின் எண்ணிக்கையில்
கவனம் கொள்கிறது
பாழாய்ப்போன அரசு
நோய்த்தொற்று வந்துவிடும் அச்சத்தில்
பசித்தொற்றிலும் வீழும் அபாயத்திலிருக்கிறோம்
எங்கள் உயிரைக் காத்துக்கொள்ள யாருமில்லாத தேசத்தில் 
உணவின்றி தூக்கமின்றி தவிக்கிறோம்
இனி எது நடந்தாலுமென்ன
ஊரடங்கில் உயிர் தப்பிக்கும் நாங்கள்
பசிப்பிணியில் மாண்டுபோவோம்
சாவு எண்ணிக்கைப் பட்டியலில்
பசித்தொற்றால் இறந்தவர்களின் பெயர்களையும் 
அறிவித்து மகிழுங்கள்
மதி கெட்ட ஆட்சியாளர்களே.

Comments

Popular posts from this blog