நமக்கு வர வேண்டிய யாவும் பறிபோய்க்கொண்டிருக்கின்றன
சாத்தானின் கருணையில் மட்டுமே நம் நிலத்தில் சாவுகள் நிகழாதிருக்கும்
நம் வழிகளை நம்மைக் காப்பதாய்ச் சொல்பவர்களே

பெரும் பாறைகளைக்கொண்டு மூடத் தொடங்கிவிட்டார்கள்
நம் காதுகளுக்கு நம் சவப்பெட்டிகள் செய்யும் ஓசை கேட்கிறதில்லையா
நம் வானின் நட்சத்திரங்கள் திருடு போய்க்கொண்டிருப்பதை 

எதிர்த்துக் கேட்க எவருமில்லை
நம்மிடம் மீதமிருந்த நம்பிக்கைகள் வெளிறிக்கொண்டு வருகின்றன
நம் திசையை இருட்டைக்கொண்டு ஒளியேற்றுகிறார்கள்
நம் கண்களில் இருள் மட்டுமே பாயத் தொடங்கிவிட்டது
நாம் இசைக்கும் பாடல்களில் மரணம் குறித்த அச்சம் ததும்புகிறது
நாம் விடைபெறும் காலத்தில்
அதோ அவர்கள் மட்டும் உயிரோடு இருக்கப் போவதாய் 

கற்பனையில் மிதக்கிறார்கள்

Comments

Popular posts from this blog