சத்தமின்றி ஒடுங்கிக் கிடக்கும் இரவில் முடிந்த மழையின் ஒரு துளி சொட்டும் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது
குளிரும் நடுக்கமும் கூடிய பொழுதில்
ஆகாயத்தைப் போன்ற விரிந்த தனிமையில் அருகில் வந்து போகும்
உன் முகத்தில் ஒரு முத்தமிட்டு
வெப்பத்தில் வீழ்கிறேன்
எப்படியாயினும் நான் மட்டுமே தனித்திருக்கும் கொடுந்துயரில்
நீ இல்லாதிருப்பது மரணத்தை விடவும் கொடிய வேதனை
உன் வீடு அடையும் பாதைகள் தெரிந்திருந்தும் பயணங்களை நிகழ்த்த முடியாத துர்பாக்கியவானாய் இருக்கிறேன்
எனக்கான அந்த சதுர அறை
வாஞ்சையோடு வரவேற்ற அந்த நாட்கள்
இப்போதும் நிழலாடுகிறது
நீ வேண்டும் என்று நினைக்கும் இந்த மனதிற்கு என்னால் ஆறுதல் கூற இயலவில்லை
காலம் தந்த சதியில் நீயும் நானும்
சந்தித்து உறவாடுவதை நீட்டிக்க முடியவில்லை
பெரும் நோய்த்தொற்று காலத்தில்
உயிர் பிழைத்திருத்தல்
உன்மீதான காதலே ஆகும்
ஆயுள் முடிவதற்குள் மறுபடி உன்னை
ஆலிங்கனத்தில் வீழ்த்தி மீண்டும் மீண்டும்  உன்மீதான பெரும் நேசத்தைப் பறைசாற்றுவேன்
என் நீங்கி விட முடியாது அன்பே ....

Comments

Popular posts from this blog