எக்கணமும் நீ என்னில் வியாபித்திருக்கிறாய்
உன்னைத் தவிரவும் வேறு எதுவும்
என்னை ஈர்க்கவில்லை
நட்சத்திரம் காண்கையில் நட்சத்திரம் ஆகிறாய்
தீண்டும் போது காற்றாகிறாய்
என் கால்கள் நனைகையில்
அலை ஆகிறாய்
வணங்கும்போது தெய்வம் ஆகிறாய்
மரத்துக்குக் கீழே நிற்கும்போது நிழல் ஆகிறாய்
நீந்தும் வேளை நீர் ஆகிறாய்
காதலில் உறைகிற வேளை
நீ என்பது காட்சிகளில் பரிணமிக்கிறாய்
நீ ஒரு தொலைவில் நான் ஒரு தொலைவில் இருந்த போதும்
நீ என்னருகில் இருப்பதாகவே கொள்கிறேன்
ஊரடங்கு காலம் முடிந்த பின்னும்
உன்னைக் காணும் காலம்
இன்னும் தோன்றவில்லை
ஆயினும் உன்னைக் காணும் பொழுதினை முடிவு செய்துவிட்டேன்
ஆகையால் நமக்கான நம் இரவினை
தயார் செய்து கொள்
ஊடலை முடித்து கூடலில் ஆழம் காண்போம் அன்பே ...

Comments

Popular posts from this blog