இறந்த இரவொன்றில் இறந்திருந்தேன் 
என்னை யாரெனக் குழம்பியிருந்தேன்
அது நானில்லை என் போதையெனச் சொன்னார்கள்
அது நல்வாக்கியமாய் இல்லை அது துரதிருஷ்டவசமானது
எனக்கான நன்மைகள் அழிவது
என் சவக்குழியின் முன் நானே 
என்னை மூட மண்ணை அள்ளியிருந்தேன்
அது நல்ல சகுனமில்லை
என் வானத்தின் நட்சத்திரங்களை
காலம் பறித்துவிட்டது
இப்போது இரவுகள் ஒளிர்கின்றன
ஆனால் அங்கு எதுவுமில்லை
என் உயிர் மட்டும் இலையுதிர் பருவத்தின் சோகத்தை
முணுமுணுக்கிறது
அது எனக்கான துர்க்கனவின் தொடக்கம் என்கிறார்கள்
விழுந்தவிட்ட பள்ளாதாக்கில் கதறும் என் குரல் 
யாருக்கும் கேட்கவில்லை
வருகிறேன்.

Comments